மெழுகுவர்த்தியில் எஸ்.பி.பி உருவம் வரைந்து அஞ்சலி : ரசிகர் நெகிழ்ச்சி!!

25 September 2020, 5:19 pm
SPB Candle- updatenews360
Quick Share

மறைந்த பின்னணி பாடகர் எஸ்ப்பியின் மறைவுக்கு ரசிகர் ஒருவர் மெழுகுவர்த்தியில் ஓவியம் வரைந்து அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து குணமடைந்தார். ஆனால் நுரையீரல் பிரச்சனை காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவர், 51 நாட்களுக்கு பிறகு இன்று பிற்பகல் காலமானார்.

அவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் தீவிர ரசிகர் ஒருவர், மெழுகுவர்த்தியில் எஸ்பிபியின் உருவத்தை வரைந்துள்ளார்.

எஸ்பிபிக்கு அஞ்சலி அஞ்சலி என மெழுகுவர்த்தியில் எழுதி, எஸ்பிபியின் உருவத்தை அழகாக வரைந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த காணொளி வைரலாகி வருகிறது.