வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகை கொள்ளை… ஒரு லட்சமும் அபேஸ் ; போலீசாருக்கு சேலன்ஞ் கொடுத்த கொள்ளையர்கள்..!!

Author: Babu Lakshmanan
6 October 2022, 1:15 pm
Quick Share

திருச்சி அருகே பூட்டி இருந்த வீட்டில் 75 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் முதலாவது குறுக்குத் தெருவில் உள்ளவர் கனிமொழி. இவரது கணவர் செந்தில்நாதன். இவர் அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த 1 ஆம் தேதி கனிமொழி தன்னுடைய குழந்தைகளுடன் சீர்காழியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த அலமாறியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 75பவுன் நகை மற்றும் ரூ.1லட்சம் பணம் கொள்ளை போய் இருந்துள்ளது. இது குறித்து கனிமொழி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் போரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் பொன்னி உதவியிடன் அங்கு சோதனை செய்யப்பட்டது.

கைரேகை நிபுணர்கள் வீட்டிலிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அவர்கள் வீட்டில் சி.சி.டி.விகள் வைக்கப்பட்டிருந்த போதும், அதன் ஹார்டு டிஸ்குகளை திருடர்கள் எடுத்து சென்று விட்டனர். அதனால் அருகில் வேறு எங்காவது சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளதா..? எனவும், அதில் திருடர்கள் காட்சி பதிவாகி உள்ளதா..? என்பது குறித்து காவல்துறை துணை ஆணையர் அன்பு தலைமையில் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

அதிக குடியிருப்பு உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே காவல்துறையினர் வெளியூர் செல்லும் நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு, அல்லது அப்பகுதியில் உள்ள காவல் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்து செல்லுமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், பொது மக்கள் அந்த அறிவிப்பை புறக்கணிப்பதால், இதுபோன்று கொள்ளை சம்பவம் நடப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Views: - 421

0

0