தொடரும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விநியோகம்… திருச்சியில் 85 கிலோ குட்கா பறிமுதல்!!

Author: Babu Lakshmanan
9 May 2022, 11:02 am
Quick Share

திருச்சி : திருச்சி அருகே வாகன சோதனையில் 85 கிலோ குட்கா போதை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் அடுத்துள்ள சோமரசம்பேட்டை அடுத்துள்ள அதவத்துார் பிரிவு சாலையில் சோமரசம்பேட்டை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை ஏற்றி வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்ட போது அந்த மூட்டைகளில் 85 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தொிய வந்தது. தொடர்ந்து காவல்துறை இனி அவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போதை பொருள் கடத்தி வந்த அல்லித்துறையை சேர்ந்த பிரபு(42), அதவத்துார் சக்தி நகரை சேர்ந்த வினோத்குமார்(38) ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Views: - 642

0

0