அயன் பட பாணியில் தங்கம் கடத்திய நபர்… திருச்சி விமான நிலையத்தில் மடக்கி பிடித்த அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
16 May 2023, 10:17 am

திருச்சி ; மீன் சாஸ் டின்னில் தங்கம் கடத்திய நபரை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்களது உடைமைகளில் தங்கத்தை கடத்தி வருவதும் அயல்நாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் தொடர்கதை ஆகி இருந்து வருகிறது.

கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர்.

அதில், கொண்டு வந்த Fish Sauce tin-ஐ அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ரூ.20.32 லட்சம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தினை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?