பாரில் நண்பர்களுடன் மது அருந்தும் போது தகராறு.. இளைஞரை கொன்ற நண்பர்கள் ; கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 9:39 am
Quick Share

திருச்சி : திருச்சி உறையூர் பகுதியில் குடிபோதை தகராறில் நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், காட்டூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரண்ராஜ் (35). இவர் திருச்சி உறையூர் கடைவீதியில் உள்ள ஒரு மதுபான கடையில் சாமி என்கிற சாமிநாதன் மற்றும் சகநண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்பொழுது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியது. இதில் சாமி என்ற சாமிநாதன் சரணை கத்தியால் அவரது கழுத்தில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து நண்பருடன் தப்பி சென்றனர். தகவல் அறிந்த உறையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை வடக்கு சரக துணை ஆணையர் சுரேஷ்குமார், காந்தி மார்க்கெட் சரக உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தலைமறைவான சாமி என்ற சாமிநாதன் மற்றும் நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சாமி என்ற சாமிநாதன் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகள் இருப்பதாகவும், அப்பகுதியில் முக்கிய கடைவீதி, பேருந்து நிறுத்தம் மற்றும் சிறு பள்ளிகள் இருப்பதால், உடனடியாக இந்த மதுபான கடைகளை மாற்ற வேண்டுமென பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 297

0

0