அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கொரோனா : ஆதரவாளர்கள் அதிர்ச்சி!!
27 September 2020, 11:34 amதிருச்சி : முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமானவர் பரஞ்சோதி. இவர் சில தினங்களாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சிக்காக கட்சித் தொண்டர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.
இந்நிலையில் அஇஅதிமுக செயற்குழு கூட்டத்திற்கு செல்வதற்காக பரஞ்சோதி கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டதையடுத்து பாஞ்சோதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.