திருச்சியில் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிலும் அதிரடி ரெய்டு..!!

Author: Babu Lakshmanan
5 December 2023, 12:47 pm

திருச்சி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர் முத்தரசு (54). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, நெல்லை மாவட்ட ஆவண காப்பக டிஎஸ்பியாக சில மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அங்கிருந்து திருச்சிக்கு மீண்டும் மாறுதலாகி நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக ஒரு மாதத்திற்கு முன் பதவி ஏற்றார்.

அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. பல இடங்களில் அவர் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலையடுத்து, இன்று காலை திருச்சி விமான நிலையம் அருகே மொராய் சிட்டியில் உள்ள டிஎஸ்பி முத்தரசு வீட்டில்
பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமச்சந்திரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தஞ்சையில் உள்ள அவரது தந்தை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!