கட்டுப்படுத்த முடியாத கஞ்சா விற்பனை… சட்டவிரோதமாக கஞ்சா விற்றவர் கைது ; 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
14 November 2022, 6:13 pm

திருச்சி ; திருச்சியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார், இரண்டு லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் பகுதியில் திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் காவல்நிலைய ஆய்வாளர் வீரமணி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்பொழுது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் 21 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் மதன் என்கிற மதுபாலன் (29) என்பதும், அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இரண்டு லட்சம் மதிப்புடைய 21 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மதுபாலன் மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!