லாரி – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : உடல் நசுங்கி 3 பேர் உயிரிழப்பு..!

Author: Babu
6 October 2020, 11:57 am
trichy accident - updatenews360
Quick Share

திருச்சி : திருச்சி அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு திருச்சியிலிருந்து முசிறி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சொகுசு காரில் சேலத்தை சேர்ந்த பிரபாகரன் (30), பிரபு (42) ,ராஜலிங்கம், சதீஷ்குமார், பழனிச்சாமி ஆகியோர் உள்பட 7 பேர் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி நாமக்கல் சாலையில் முசிறி அருகே உள்ள உமையாள்புரம் என்ற இடத்தில் காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்து வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். காரில் பயணித்து வந்து காயமடைந்தவர்கள் சுயநினைவின்றி இருந்ததால் இறந்தது யார், காயமடைந்தவர்கள் யார் என்ற விபரத்தை உடனடியாக தெரிந்து கொள்ள இயலவில்லை.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை உடற்கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 44

0

0