ரவுடிகளின் போட்டோவால் எழுந்த சிக்கல்.. ஆடிப் போன இன்ஸ்டாகிராம் ; அதிரடியாக கைது செய்த போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2025, 6:58 pm
திண்டுக்கல் கோபால் நகரை சேர்ந்த திமுக பிரமுகர் ரவுடியுமான பட்ற சரவணன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரது புகைப்படம் மற்றும் அலெக்ஸ் என்பவரின் புகைப்படம் பட்ற சரவணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அல்-ஆசிக் போன்ற ரவுடிகளின் புகைப்படத்தை வீடியோவாக சினிமா டயலாக் உடன் தயார் செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த 25 வயதான யோகேஸ்வரன் பதிவு செய்து வந்தார்.
மேலும் ரவுடிகளை ஹீரோவாக காண்பித்து சமூக வலைதளங்களில் பகை உணர்வுகளை தூண்டும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு வந்த யோகேஸ்வரனை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் திண்டுக்கல் நகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் போலீசார் கைது செய்தனர்
மேலும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன் பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் இதுபோன்று யாரும் தவறுகள் செய்யாதீர்கள் அப்படி செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனக் கூறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது

காவல்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் வேறு யாரும் இதே போல் சமூக வலைதளங்களில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் பகை உணர்வுகளை தூண்டும் வகையில் எந்த பதிவு பதிவிட்டாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்
