லாரி கவிழ்ந்து விபத்து : 10 டன் எடையுள்ள 140 பேரல் பஞ்சுகள் சாலையில் கொட்டியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2021, 8:09 am
cotton- Updatenews360
Quick Share

திருப்பூர் : அவிநாசியில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

நம்பியூரில் இருந்து பஞ்சப் பேரல்களை ஏற்றிச் சென்ற லாரி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு அவிநாசி வழியாக சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கைகாட்டி புதூர் பகுதிக்கு வரும் போது அதிக பாரம் ஏற்றி வந்ததால் நிலைதடுமாறிய லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த 10 டன் எடையுள்ள 140 பேரல் பஞ்சுகள் சாலையில் கொட்டியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . உடனடியாக போக்குவரத்து காவல் துறையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்

Views: - 62

0

0