பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொல்ல முயற்சி? பதை பதைக்க வைக்கும் காட்சி.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2022, 6:11 pm
Kids Torture - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் பச்சிளம் குழந்தையை தரையில் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேருந்து நிலைய பிளாட்பார்மில் ஆதரவற்றவர்கள் தங்கி வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது . இந்த நிலையில் நேற்று இரவு பச்சிளம் குழந்தை ஒன்றை யாசகம் பெறும் ஒரு ஆணும் , பெண்னும் அதட்டி கொண்டே இருந்தனர்.

இதை அங்கு நின்ற இளைஞர்கள் சிலர் கவனித்து கொண்டு இருந்தனர் . ஒரு கட்டத்தில் அந்த ஆண் குடிபோதையில் குழந்தையை திரையில் அடிக்க முயன்றார் . இதை கவனித்த இளைஞர்களில் ஒருவர் ஓடிப்போய் குழந்தையை பறித்து காப்பாற்றினார் .


இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற பொதுமக்கள் , அந்த குழந்தை குறித்து கேட்டனர் . அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற மற்ற சிலரிடம் கேட்டபோது , இவர்களிடம் குழந்தை இல்லை . இவர்கள் இருவர் மட்டும் தான் இங்கு தங்கியிருந்தனர் என்று சொல்ல இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து பொதுமக்கள், அவர்கள் குழந்தையை கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூரத்தி தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் குழந்தை கன்னியாகுமரியில் உள்ள அவருடைய அண்ணனுடைய குழந்தை என கூறினார். இந்த குழந்தை உண்மையில் அவர் அண்ணன் குழந்தைதானா? இல்லை எங்கிருந்தாவது கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் குழந்தையை தோட்டியோடு பகுதியில் உள்ள ஒரு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கூட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் குழந்தையை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 464

0

0