உள்ளூர்லயே முடியல.. இதுல வெளிநாடு?.. ஸ்டாலினின் அமெரிக்க பயணம் குறித்து அரசியல் பிரமுகர் கருத்து..!

Author: Vignesh
27 August 2024, 10:05 am

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூபாய் பத்தாயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார். முதலமைச்சருடன் அதிகாரிகள் குழுவும் அமெரிக்கா செல்கிறது. இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்நாட்டு முதலீடுகளையே தக்க வைக்க முடியாத முதலமைச்சர் உலக முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது எனவும், மூன்றாண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன் மூலம் உருவான வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?