சிறையில் இருந்து நாளை மறுநாள் விடுதலை… தமிழகம் வருகை குறித்த தேதி பின்னர் அறிவிப்பு : டிடிவி தினகரன்

25 January 2021, 7:13 pm
Sasikala-in-jail-updatenews360
Quick Share

சென்னை : சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் விடுதலை தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி அவர் விடுதலையாக உள்ள நிலையில், திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பெங்களூரூ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் 20ம் தேதி சேர்க்கப்பட்டார்.

கொரோனா மற்றும் சர்க்கரை நோய்,தைராய்டு உள்ளிட்ட நோய்களுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்த நிலையில், வரும் 27ம் தேதி அவர் உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகமும் அறிவித்துள்ளது.

Chennai TTV Dinakaran Byte- updatenews360

இந்த நிலையில், சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் விடுதலை தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 8

0

0