வெறிச்சோடிய புதுச்சேரி : செவ்வாய் ஊரடங்கு!!

25 August 2020, 9:47 am
Pondy Lockdwon- Updatenews360
Quick Share

புதுச்சேரி : அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் இரண்டாவது வாரமாக செவ்வாய்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 15நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. மேலும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரம் தோறும் செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது வாரமாக செவ்வாய்கிழமையான இன்று புதுச்சேரியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கையொட்டி பால் நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.

அத்தியாவசியமின்றி வெளியே வந்தர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் இ-பாஸ் முறை ரத்து செய்து இருந்தாலும் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாகனங்களை அனைத்தையும் எல்லையில் தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினர்.

முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் வெளியே நடமாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்து இருந்த நிலையில் இன்று பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Views: - 35

0

0