மர்ம பொருள் வெடித்ததில் 2 சிறுவர்கள் காயம்.! காவல்துறை விசாரணை.!!

7 August 2020, 11:12 am
Kvp Injury - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே மர்மப் பொருள் வெடித்ததில் அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் லேசான காயமடைந்தது குறித்து மர்ம பொருளின் துகள்களை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் தெற்கு காலனியை சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் கலையரசன் (வயது 12). அதே பகுதியை சேர்ந்த சங்கிலி என்பவரது மகன் கருப்பசாமி (வயது 11).

இருவரும் நேற்று மாலை அப்பகுதியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இதில் நடந்த சென்ற சிறுவர்கள் இருவரும் லேசான காயமடைந்தனர். பலத்த சத்ததை கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பொது மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடித்து சிதறிய மர்ம பொருளின் துகள்களை கைப்பற்றி காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Views: - 9

0

0