விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சீல் : ஆட்சியர் எச்சரிக்கை.!!

1 August 2020, 4:29 pm
tuticorin Collector Warn - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என்றும், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 30 திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமிலும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்டத்தில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று உள்ளது. இதில் 7107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பி விட்டனர். 2214 சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் .06 சதவீதம் தான் இறப்பு உள்ளது. பரிசோதனை முகாம்கள் அதிகமாக அமைக்கப்பட்டு சோதனை எடுக்கப்பட்டு வருவதால் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஆலை, மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அனைவரும் முககவசம் அணிவது கட்டயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியமால் செல்பவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Views: - 14

0

0