கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து.!!

12 August 2020, 2:04 pm
Sweet Stall Fire - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் ஜெகஜோதி ஸ்வீட்ஸ் கடைக்கு சொந்தமான இனிப்பு,காரம் மற்றும் கேக் தயாரிக்கும் பட்டறையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் வளாகத்தில் ஜெகஜோதி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் கடை வைத்திருப்பவர் ஜெகதீஸ். இவரது கடைக்கு தேவையான இனிப்பு,காரம் மற்றும் கேக் வகைகள் தயாரிப்பதற்காக உழவர் சந்தை பின் பகுதியில் உள்ள சொக்கன்ஊரணி தெருவில் பட்டறை வைத்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் அந்த பட்டறை பகுதியில் இருந்து அதிகளவு புகை வெகுநேரமாக வந்துள்ளது. இதையெடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பட்டறையை திறந்து பார்த்த போது, பொருள்கள் தயாரிக்க பயன்படுத்திய அடுப்புகளில் தீபற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதையெடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

விரைந்து வந்து தீயை அணைத்த காரணத்தினால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள இனிப்பு, காரம் மற்றும் கேக் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. சரியாக அடுப்புகள் அணைக்கப்படமால் இருந்த காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 20

0

0