ஜனநாயகப் போரில் கொள்கை, அரசியல் எதிரிகளை வெல்லணும் : தொண்டர்களுக்கு விஜய் மடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2025, 11:59 am

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களுக்கு, வணக்கம்‌. நம்மோட அரசியல்‌ பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத்‌ தாண்டி வர்றோம்‌… இடையிலஎத்தனை சவால்கள்‌, நெருக்கடிகள்‌ வந்தாலும்‌ எல்லாத்தையும்‌ மக்கள்‌ சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால்‌ கடந்து வந்துகிட்டே இருக்கோம்‌.

வர்ற 2026 சட்டமன்றத்‌ தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்‌… இந்தச்‌ சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட்‌ 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும்‌ தெரிஞ்சதுதான்‌.

முத்தமிழையும்‌ சங்கம்‌ வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும்‌, அரசியல்‌ எதிரியையும்‌ சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப்‌ போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள்‌ என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான்‌ இந்த மாநாடு…

அதனாலதான்‌ வைகை மண்ணில்‌ நடக்கும்‌ இந்த மாநாடு, ‘வாகை சூடும்‌ வரலாறு திரும்புகிறது: வெற்றிப்‌ பேரணியில்‌ தமிழ்நாடு என்ற தேர்தல்‌ அரசியல்‌ மையக்கருத்த முன்‌ வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி…

மாநிலம்‌ அதிர மாநாட்டிற்குத்‌ தயாராவோம்‌. மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம்‌ என்பதை உலகிற்கு மீண்டும்‌ உணர்த்துவோம்‌. நல்லதே நடக்கும்‌. வெற்றி நிச்சயம்‌. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!