பாமகவுக்கு தாவிய தவெக நிர்வாகிகள்.. நாளை மாநாடு நடக்கும் நிலையில் விஜய்க்கு ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 6:07 pm

நாளை மாநாடு நடக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி காடாபுலியூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வெற்றிக்கழக கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகி தமிழரசன் தலைமையி லும் பாமக கடலூர் (வ) மாவட்டசெயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து தங்களை பாமகவின் இணைத்துக் கொண்டனர்.

தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிய தமிழரசன் நிருபர்களிடம் கூறுகையில் தமிழக வெற்றி கழகத்தின் நிலைபாடுகள் செயல்கள் பிடிக்காததால் கட்சியிலிருந்து விலகி பாமகால் இணைந்ததாக பேட்டி அளித்தார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?