மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த த.வெ.க…. மதுரையில் ஆட்டம் ஆரம்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2024, 4:28 pm

மதுரை பிபி குளம் முல்லை நகர் பகுதியில் உள்ள பொது மக்களை மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை காலி பண்ண கோரி நோட்டீஸ் அனுப்பியது.

அதனை தொடர்ந்து முல்லை நகர் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் சாலையிலே அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

TVK Party Supports and Participate in Public protest

இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய்அன்பன் கல்லானை தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் போராடும் பொதுமக்களை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் போராடும் பொது மக்களிடம் முக்கிய நிர்வாகிகளிடமும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சிஆனந்த் தொலைபேசி மூலமாக பேசினார்.

Tvk Supports To Public Protest

பின்னர் அவர்களின் போராட்டத்திற்கான காரணங்களை கேட்டு அறிந்து தலைமையிடம் தெரிவிப்பதாகவும் கூறினார் முல்லை நகர் பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!