முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2025, 4:48 pm

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக சட்டப்பேரவை நடக்கும் நிலையில், மாநாடு, ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்து சூறாவளி போல தேர்தல் பணியாற்றி வருகிறார்.

இதுவரை அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. விஜய் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க: ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அதற்குள் கூட்டணி யாருடன் என்பது தெரிந்துவிடும். இந்த சூழலில் பிரபல பத்திரிகையான நக்கீரன் தனது அட்டை படத்தில், பாஜகவிடம் சரண்டரான விஜய் என்ற தலைப்பில் நக்கீரன் தனது இதழில் குறிப்பிட்டுள்ளது.

இந்த படத்தை பகிர்ந்த தவெக கொள்ளை பரப்பு செயலாளர் ராஜ்மோகன், கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி நக்கீரனைப் பார் ! போட்டியே நக்கீரனுக்கும் தினமலருக்கும்தான் போல!!

நீங்களும் உங்கள் நண்பர்களும் வேண்டுமானால் வெள்ளைக் குடையோடு வடக்கில் சரண்டர் ஆகி இருக்கலாம். நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாரும் இல்லை என்ற அம்பேத்கர் வழியில் நடைப் போடுகிறோம் நாங்கள்!

விளம்பரங்களை தக்கவைக்க நீங்கள் வேண்டுமானால் சரண்டர் ஆகலாம், விளம்பரப் படம் எடுக்கும் செலவில் இரண்டு அரசுத் திட்டங்கள் கொண்டு வரலாம் என்ற பெருந்தலைவர் காமராசரின் பாதையில் போகிறோம் நாங்கள்!

உங்கள் நண்பர் மறந்துவிட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக கொண்டவர்கள் நாங்கள். உலகத்திலேயே பாஜக எங்கள் “எதிரி” என்று சொல்லித் துவங்கிய ஒரே கட்சி தவெக. மக்களைத் தவிர யாரிடமும் சரணடைய மாட்டோம்.

டில்லி சாரை Thorஆகக் காட்டி, கையில் ஆயுதம் கொடுத்திருப்பது சரியா? ஒரு காலத்தில் எப்படி இருந்த ஊடகம்… என்னைப் போல எத்தனை ஆயிரம் வாசகர்கள் அதைக் கொண்டாடி இருப்போம்! ஆனால் இன்று? ஏன் இந்த சங்கித்தனம்?? பரிதவிக்கும் அமித்ஷாதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஆருடம் சொல்கிறீர்களா? ஆசிரியர் அண்ணன் இதைப் பார்த்தாரா??

TVK Rajmohan who criticized a famous magazine

கொடநாட்டுக்கு அஞ்சாத பேனா வடநாட்டுக்கு அஞ்சுகிறதா? இந்தப் பயனற்ற அட்டைப்பட அரசியலை புறங்கையில் உதறி, பயணிக்கும் சாலையெல்லாம் வெற்றிச் சோலைகளாக மாற்றி, உங்கள் கோட்டைகளில் ஓட்டை போடுவதில் நிபுணர் எங்கள் வெற்றித் தலைவர். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் மாற்றம் வந்தே தீரும். இந்த அட்டைப் படங்களிலும்.. அரசியலிலும்.. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?
  • Leave a Reply