பெத்த அம்மாவையே கண்டுக்காம போறாரு… இவரெல்லாம் எங்க? சர்ச்சையில் சிக்கிய விஜய்!

Author:
22 August 2024, 4:16 pm

திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். அதற்கான வேலைகளை மும்முறமாக ஆரம்பித்துவிட்டார்.

இன்று அவர் தனது தமிழக வெற்றி கழக கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகம் செய்து வைத்து விழா நடத்தினார் . அந்த விழாவில் விஜய்யின் அம்மா சோபா மற்றும் அப்பா சந்திரசேகர் இருவருமே கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மகன் விஜய்க்கு கையை கொடுத்து வாழ்த்து சொல்ல முயன்ற அம்மா சோபாவை விஜய் கவனிக்காமல் அங்கிருந்து அவரை விட்டு விலகி செல்கிறார்.

ஆனால், விஜய் அருகில் இருந்த அம்மாவிற்கு கை கொடுக்காதது மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளான விஷயமாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக நெட்டிசனல் சொந்த அம்மாவை கூட கண்டுக்காமல் இப்படி போகிறார். இவரெல்லாம் எங்க அரசியலில் வந்து மக்களுக்கு நல்லது செய்யப் போறார்? என மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!