TVK Vs DMK தான்.. மாண்புமிகு ஸ்டாலின், மோடி ஜி அவர்களே.. விஜய் அட்டாக் பேச்சு!

Author: Hariharasudhan
28 March 2025, 3:12 pm

இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் திருவான்மியூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், “அரசியல்னா என்னங்க? ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழனும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே குடும்பம் மட்டும் நல்லா வாழனும் என நினைக்கிறது அரசியலா?

தமிழ்நாட்டைச் சுரண்டி நன்றாக வாழனும் என்று நினைப்பதைவிட, எல்லாருக்கும் நல்லது நடக்கணும் என்று நினைக்கிறதுதானே அரசியல். அதுதான் நம் அரசியல். காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்னையை மடைமாற்றி, மக்கள் விரோத ஆட்சியை, மன்னராட்சி போன்று நடத்துகிறார்கள்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் கம்பீரமாகச் சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் அதைக் காண்பிக்க வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியை பாசிச ஆட்சியென அடிக்கடி அறைக்கூவல் விடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்வது மட்டும் என்ன ஆட்சிய? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதான் இங்கு செய்து கொண்டிருக்கிறீர்கள்.

TVK Vijay

நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்கிறான் என்று சொல்கிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்றும் சொல்கிறீர்கள். பிறகு ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்?

அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரண காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாகக் கூட மாறும். சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கெல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரிகள் அரசு தான் காரணம்.

இந்த நிலை மாற வேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வழி இங்கிருக்கும் உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டுமென்றால் இவர்களை மாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி? அதற்கு என்ன செய்யப் போகிறோம்? தினமும் மக்களைச் சென்று சந்தியுங்கள்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, உங்கள் ஆட்சியைப் பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தினால் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைச் சொல்ல முடியவில்லை.

இதையும் படிங்க: உதயநிதிக்கு மட்டும் No தடா.. அடித்துச் சொல்லும் இபிஎஸ்!

இதில் உங்களை அப்பா என அழைக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். உங்களால் தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் என் சகோதரிகளான தமிழ்நாட்டுப் பெண்கள்தான், உங்கள் அரசியலுக்கு, உங்கள் ஆட்சிக்கு, உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்போகிறார்கள்.

நீங்கள்தான் இப்படி என்றால், உங்களுடைய சீக்ரெட் ஓனர், உங்களுக்கு மேல இருக்காங்க. மாண்புமிகு திரு மோடிஜி அவர்களே, ஏதோ உங்களுடையப் பெயர்களை எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு பயம் இருப்பதைப் போல கட்டமைக்கிறீர்கள். மத்தியில் ஆள்வார்கள் என்று சொல்கிறோம, ஆளும் அரசு எனக் கூறுகிறோம். ஆனால் உங்களின் பெயரைக் கூற வேண்டும் எனக் கேட்கிறீர்கள்.

நீங்கள் தானே கேட்டீர்கள். வைத்துக் கொள்ளுங்கள். 2026 தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்கப் போகிறது. இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக. தமிழ்நாடு என்றால் ஏன் ஜி அலர்ஜி. தமிழ்நாட்டுடன் விளையாடாதீர்கள் பிரதமர் சார், பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் தமிழகம். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பாஜகவின் திட்டம் என்ன என்பது தெரிந்துவிட்டது” எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!