இரு சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் : மகளுக்கு திருமணம் செய்த தம்பதி அடித்துக்கொலை… தமிழகத்தில் தலைதூக்கும் அடுத்த பிரச்சனை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 மே 2022, 8:27 மணி
Couples Murder -Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் (சாலை) கிராமம் அருகே அடர்ந்த முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலம் இருப்பதாக கிராம மக்கள் அரக்கோணம் தாலூகா காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து இரு சடலங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர்கள்.

விசாரணையில் இருவரும் கணவன் மனைவி எனவும், கணவன் பெயர் மாணிக்கம் (வயது 52), மனைவி ராணி (வயது 47) எனவும் இவர்கள் காஞ்சிபுரம் தாலூகா புஞ்சை அரசந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் இவர்கள் பட்டு நெசவு தொழில் செய்து வந்ததாகவும், இவர்களுக்கு பெருமாள் (வயது 26) மகனும் சசிகலா (வயது 23) மகளும் உள்ளனர்.

மேலும் மகளின் திருமணத்திற்கு அளவிற்கு அதிகமாக கடன் பெற்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் நேற்று மதியம் அரக்கோணம் அடுத்த கைலாசபுரத்தில் உள்ள தனது ராணியின் அண்ணன் மின்னலான் (முன்னாள் மாநில வன்னியர் சங்க துணை தலைவர்) அவர் மூலமாக சோளிங்கரில் உள்ள நிதி நிறுவனத்தில் கடன் பெற வருவதாக கூறியதாகவும் நீண்ட நேரமாகியும் வராததால் மின்னாலன் சோளிங்கரில் காத்திருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். சடலத்தை கைப்பற்றிய அரக்கோணம் தாலூகா காவல் துறையினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கடன் கொடுத்தவர்கள் கொலை செய்து இங்கு வீசி சென்றார்களா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக மாணிக்கம், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கந்து வட்டி கும்பலிடம் 2 லட்சம் ரூபாயை கடந்தாண்டு கடனாக வாங்கியுள்ளார். அசலையும், வட்டியையும் கட்டாததால், கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் நேற்று மாலை மாணிக்கம், ராணியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து, கைலாசபுரம் ஏரிகால்வாய் ஓரம் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Ar Diary லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
  • Views: - 803

    0

    0