அதிமுக கூட்டத்தில் புகுந்த திமுக கார் விவகாரத்தில் டுவிஸ்ட்… சிறுவன் கார் ஓட்டிய ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2025, 6:58 pm
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.
அப்போது இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னாள் இந்த கூட்டத்திற்குள் காரியாபட்டி சேர்மன் செந்தில் அவருடைய சகோதரர் செளந்தரின் கார் உள்ளே நுழைந்தது.
காவல்துறை சொல்லியும் கேட்காமல் உள்ளே சென்ற காரை அதிமுகவினர் தடுத்து காரின் கண்ணாடியை உடைத்தனர். அப்போது அந்த சௌந்தரின் மகனை மருத்துவமனை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்தக் காரை சௌந்தரின் மகன் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் ஓட்டிச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவின் அடிப்படையில் சிறுவனை வைத்து காரை இயக்கினார்களா என காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
