கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது: இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்

Author: Udhayakumar Raman
6 December 2021, 5:25 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட புளியந்தோப்பு போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் சிறு சிறு பெட்டலங்களாக இரண்டு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், புளியந்தோப்பு பி. கே  காலனி பகுதியை சேர்ந்த கவி என்கின்ற கவியரசன் மற்றும் புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பொருட்களை வாங்கி வந்து புளியந்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 144

0

0