சிவசங்கர் பாபா மீது மேலும் 2 மாணவிகள் புகார்..! மீண்டும் கைது

24 June 2021, 11:51 pm
Quick Share

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மீது மேலும் 2 மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக சமூக ஊடகங்களில் புகார்கள் வந்ததையடுத்து அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.தொடர்ந்து அவரை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிவசங்கர் பாபா ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் நோக்கில் சுஷில் ஹரி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கரின் சிஷ்யை சுஷ்மிதா ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேலும் இரண்டு மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர்.பள்ளி மாணவிகளை மூளை சலவை செய்தும்,வற்புறுத்தியும் தனது ஆடம்பர அறையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு மாணவர்கள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 149

0

0