இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி.. இளைஞர் கவலைக்கிடம்!!

8 April 2021, 2:43 pm
Accident Dead -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில் ஆபத்தான நிலைமையில் இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்த ராம்ராஜ் ( வயது 40) என்பவர் ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 21) என்பவர் அவரது இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராம்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அபினேஷ் ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . இந்த சம்பவம் குறித்து ஆராய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 3

0

0