உக்ரைன் உலகக்கோப்பை மினி கால்பந்து போட்டி: நீலகிரி மாணவியர் 4 பேர் தேர்வு

5 July 2021, 6:56 pm
Quick Share

நீலகிரி : மினி கால்பந்து உலக கோப்பையில் பங்கேற்க  நீலகிரியில் நான்கு மாணவிகள் தேர்வாகியுள்ளனர். 

பெண்களுக்கான 23 வயதுக்குட்பட்ட மினி கால்பந்து 2021 உலக கோப்பை, உக்ரைன் நாட்டில் ஆக., 11 ம் தேதி துவங்குகிறது.  பல்வேறு நாடுகளிலிருந்து பலர் இந்த மினி கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதில், இந்தியாவில், ஆசிய மினி கால்பந்து கூட்டமைப்பு தேர்வு செய்ததில், இந்தியாவிலிருந்து, 15 பேர் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். அதில், மாநிலத்தில், நீலகிரியில், தனியார் பள்ளியை சேர்ந்த சவுமியா, ஜெயஸ்ரீ, ெஹப்சிபா கிரேஸ், சஞ்ஜனா ஆகிய நான்கு மாணவிகள் இப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

போட்டிக்கு செல்லும் மாணவிகள் நேற்று,  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சந்தித்து வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர் சிவா கூறுகையில், ‘‘ இந்தியா அளவில் மாநிலத்தில் நீலகிரியில், நான்கு மாணவிகள் மினி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். ஆக., மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.’’ என்றார்.

Views: - 60

0

0