மொட்டை தலை… சைடு பேக்… இரவில் வீதியில் வலம் வரும் மர்ம நபர் செய்யும் அதிர்ச்சி காரியம்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!
Author: Babu Lakshmanan27 August 2021, 2:42 pm
கரூர் நகர பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் மர்ம நபர் – சமூக வலைத்தளங்களில் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் பாதை, வளையல் காரன் தெரு, நரசிம்மபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து ஒரே நபர் ராயல் என்ஃபீல்டு, யமஹா, டியோ ஆகிய மூன்று இருசக்கர சக்கர வாகனங்களை மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் திருடிச் சென்றுள்ளார். 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் ஒரே நபராக வந்து இரு சக்கர வாகனங்களை திருடிச் செல்வதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கரூர் மாவட்டத்தில் பல்வேறு நபர்களால் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக கரூர் நகர காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு இருசக்கர வாகனங்களை திருடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
0
0