இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான கலந்தாய்வு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

25 November 2020, 10:25 am
Cuonciling Cancel - Updatenews360
Quick Share

நிவர் புயல் காரணமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிகத்தை மிரட்டி வரும் நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த எம்பிபிஎறு மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற இருந்த சிஏ தேர்வுகளும் ஒத்திவைப்பட்டுள்ளது. இதனிடையில் இளநிலை யோகா மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பட்டுள்ளது.

இளநிலை யோகா மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வர 27ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படிப்புகளில் சேர சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பத்திருந்தனர்.

தற்போது நிவர் புயல் காரணமாக புயலுக்கு பின்னர் மழை தாக்கம் இருக்கும் என்பதால், கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும், கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரத்துறை இணையதளத்தை மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0