ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2023, 2:38 pm
Vijayakanth - Updatenews360
Quick Share

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வேதனை அடைந்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்களும் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய வேண்டும் எனவும், இந்த விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 131

0

0