அதிமுக தொண்டர்களை அச்சுறுத்தும் ஆள் இல்லாத ஆம்புலன்ஸ்… கேவலமான அரசு : இபிஎஸ் எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2025, 10:46 am
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்ட போது, உடனே ஆம்புலென்ஸ் வந்ததால், அதில் நோயாளியே இல்லை என்றும் என்னோட ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல ஆளே இல்லாமல் ஆம்புலென்ஸை அனுப்பி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலை இந்த கேடுகெட்ட, கேவலமான அரசு செய்கிறது.
நானும் பல இடத்தில் பார்த்துவிட்டேன் இதேபோல தான் செய்கிறார் “நேருக்கு நேர் எதிர்க்க தில்லு தெம்பு திராணி இல்லாதவர்கள் இப்படி கேவலமான செயலில் ஈடுபடுகிறார்கள்”
இந்த ஆம்புலன்ஸ் என்னையும் ஓட்டுனரின் பெயரையும் குறித்து வைத்து காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் எனக் கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் சத்தம் போட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் இதற்கு எச்சரிக்கை விடுவதாகவும், அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்று ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், போட்டி வரும் ஓட்டுனரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார் என எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்தார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த துப்பில்லாத அரசு இந்த அரசு, அதிமுக மக்கள் கட்சி, மக்கள் அரசு. மக்களின் எண்ணத்துக்கு ஏற்றவாறு செயல்படும்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்” என்று கூறினார்
