வரலாறு காணாத அளவில் வாழை இலை விலை சரிவு : நஷ்டத்தில் விவசாயிகள்!!

19 April 2021, 1:51 pm
banyan Leaf -Updatenews360
Quick Share

மதுரை : கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாக்கள், திருமணங்கள் நடைபெறாததால் மதுரையில் வாழை இலை விலை 10 மடங்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரைனா 2 ஆம் அலை பரவல் காரணமாக திருவிழாக்கள், திருமணங்கள் நடைபெறாத காரணத்தால் வாழை இலை விலை வரலாறு காணாத அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டு 1000 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டு ஒன்று 100 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் ஆர்டர்கள் ரத்தாகி உள்ளது.

ஒரு கட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் செலவு 200 ரூபாய் செலவாகி உள்ள நிலையில் 100 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் வியாபாரிகள், விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கட்டு 100 ரூபாய்க்கு விற்பனை ஆனாலும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் வாழை இலைகள் தேக்கம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Views: - 82

0

0