காலிங் பெல் அடித்ததும் காணாமல் போன தாலிச்செயின்.. தனியாக இருப்பவர்களே உஷார்!

Author: Hariharasudhan
29 November 2024, 5:35 pm

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய்பொடி தூவி செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது வீட்டின் காலின் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு உள்ளது. எனவே, பிரியங்கா கதவைத் திறந்து யார் என்று பார்த்து உள்ளார்.

இவ்வாறு பிரியங்கா வந்த அடுத்த நொடியே, காலிங் பெல் அடித்த நபர் அவரது முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி உள்ளார். தொடர்ந்து, பிரியங்க கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை பறித்த அந்நபர், அங்கு இருந்து உடனடியாக தப்பிச் சென்று உள்ளார்.

பின்னர், இது குறித்து போலீசாரிடம் உடனடியாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் பேரில் நடத்தப்பட்ட போலீசாரின் விசாரணையில், பிரியங்காவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் என்பதும், அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராம்லால் என்பதும் தெரிய வந்து உள்ளது.

Chain snatching in Tambaram

மேலும், அவர் தனது சொந்த ஊருக்குச் செல்வதையும் அறிந்த போலீசார், அவரைப் பிடிப்பதற்கு உடனடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். அப்போது, அங்கு அவரைத் தேடிப் பிடித்த போலீசார், கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதையும் படிங்க: நடிகை வீட்டில் அதிரடி ரெய்டு.. திடீரென நுழைந்த அதிகாரிகள் : கட்டு கட்டாக பணம்? திரையுலகம் ஷாக்!

இந்த விசாரணையில், தனது மனைவி தங்கச் செயின் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் இந்தச் செயலில் ஈடுபட்டதாக ராம்லால் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், செயின் பறிப்பு குறித்து புகார் அளித்த 6 மணி நேரத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sivrajkumar health update பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் ..அடுத்தடுத்து காவு வாங்கும் டிசம்பர் மாதம்..சோகத்தில் ரசிகர்கள்..!
  • Views: - 107

    0

    0

    Leave a Reply