நெருங்கும் பொங்கல் பண்டிகை: ரூ.5 கோடி வரை விற்பனையான ஆடுகள்…!

Author: kavin kumar
11 January 2022, 1:22 pm
Quick Share

தருமபுரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்லம்பள்ளி மற்றும் பென்னாகரம் வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் பென்னாகரம் பகுதியில் செவ்வாய் கிழமைகளில் வார சந்தை நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த வாரச்சந்தைகளில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோழி மற்றும் ஆடுகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய வார சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் இன்றைய சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்தது.

இன்றைய சந்தைனில் ஆடு விலை ரூபாய் 7 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இன்றைய நல்லம்பள்ளி சந்தையில் மட்டும் சுமார் 2000 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இவை சுமார் 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இன்று விற்பனையானது. அதே போல் பென்னாகரம் வார சந்தையில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனைக்கு வரப்பெற்று சுமார் 3 கோடி ரூபாயிக்கும் மேல் விற்பனை செய்யபட்டது. மேலும் பென்னாகரம் மற்றும் நல்லம்பள்ளி வாரச்சந்தைக்கு வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வருவாய் துறையினர் முகக்கவசம் வழங்கினார்கள்.

Views: - 268

0

0