நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள்: கோவையில் தொண்டர்களிடையே அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேர்காணல்..!!

Author: Rajesh
22 January 2022, 4:37 pm
Quick Share

கோவை: முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி அதிமுக தொண்டர்களிடையே நேர்காணல் நடத்தினார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பாக போட்டியிட அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்பமனு அளித்திருந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகமான “இதய தெய்வம் மாளிகையில்” கோவை கவுண்டம்பாளையம், மற்றும் கோவை வடக்கு, மற்றும் மேட்டுப்பாளைம் சட்டமன்ற தொதிகளுக்குட்பட்ட வார்டுகளில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமனு அளித்த தொண்டர்களிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேர்காணல் நடத்தினார்.

அவருடன் மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர், எ.கே.செல்வராஜ், மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் தற்பொழுது திமுக ஆட்சியமைத்து 8 மாதங்களில் தமிழகம் முழுவதும் திமுகவினரின் அத்துமீறல்களால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பொங்கள் தொகுப்பு வழங்கியதில் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது மட்டுமின்றி, வழங்கிய பொருட்களும் தரமில்லாமல் வழங்கியதால் மக்கள் திமுகவினர் மீது மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் எண்ணற்ற மக்கள் நலதிட்டங்களும், வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்றுள்ளதால், அதிமுகவின் சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் எடுத்து சென்றாலே எளிதில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையுடன் அதிமுகவினர் ஆர்வமுடன் இந்த நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகளிலும் சேர்ந்து 15,40,901 ஆண்களும்,15,91,654 பெண்களும், 573 மூன்றாம் பாலினத்தவர் என மொத்த 31,33,128 பேர் கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 523

0

0