தமிழகத்தில் தடுப்பூசி முகாம் நாள் மாற்றம்… காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2022, 11:12 am

தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம்தோறும் புதன்கிழமை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த நிலையில்அக்டோபர் முதல் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ; ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.மொத்தமாக 5.37 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது, தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை. தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். என கூறினார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!