தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு : மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 4:16 pm
Minister Subramanian -Updatenews360
Quick Share

திருப்பூர் : மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகையில், கொரோனா குறித்து அச்சத்தை ஏற்படுத்த கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாநகரில் நடைபெற்று வரக்கூடிய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியம், தற்போது தமிழகத்தில் 56 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 67 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 13 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அளவில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று எவ்வித பாதிப்பும் இல்லாத தொற்று என்பதால் அச்சப்பட தேவையில்லை.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரும் நேரத்தில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

ஆனால் மக்களுக்கு செலுத்த தடுப்பூசி தான் இல்லை. எனவே மத்திய அரசு போதுமான அளவு தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Views: - 122

0

0