வீதிக்கு வந்த வடகலை – தென்கலை மோதல் : நா கூசும் வகையில் பேசியதால் பக்தர்கள் முகம் சுழிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2025, 5:32 pm

கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட 2 வந்து நாளில் ஏற்பட்ட மோதல் வீதிக்கு வந்தது.

டிஸ்னரியில் கூட காண முடியாத வார்த்தைகளையும், இலக்கண புத்தகத்தில் கூட கண்டுபிடிக்க முடியாத நா கூசும் அவ சொற்களையும் , பொதுமக்கள் மத்தியில் வடகலை தென்கலையினர் பேசிய பேச்சை கண்டு காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதையும் படியுங்க: ஆண்கள் மீது சுத்தமா நம்பிக்கை இல்ல… மாலைமாற்றி திருமணம் செய்த பெண்கள்!

கோயில் விழாக்களில் திவ்ய பிரபந்தமோ, வேத பாராயணமோ இரு பிரிவினரும் கோஷ்டிகள் பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நேற்று இரவு கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு வரதர் காட்சி அளிக்கும்போது, தாத்தாச்சாரி குடும்பத்தினர் மந்திர புஷ்பம் எனும் வேத மந்திரங்களை பாட தென் கலை பிரிவினரும் பாடுவோம் என கூற வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி வேத பாராயணம் செய்ததால் காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்நிலையில், இன்று கோவிலில் இருந்து வரதர் கிளம்பி சுமார் 12 வீதிகள் வழியாக அருள் பாலித்த படி பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மீண்டும் தென்கலை வடக்கலை இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர் என்பதை கூட பார்க்காமல், அதிகமாக படித்த வடகலை தென்கலை என இரு பிரிவினரும் பேசவே நா கூச்சம் அவ சொற்களை மக்கள் மத்தியில் மாறி மாறி பேசி திட்டி கொண்டனர்.

பல ஆண்டுகளாக தேவராஜ கோவில் வளாகத்துக்குள்ளையே நடந்த இந்த வாக்குவாதம் தற்போது வீதிக்கு வந்துவிட்டது என பொதுமக்கள் புலம்புகின்றனர். நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தும் இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களோ தீர்வு காண ஏன் முற்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Vadagalai vs Thengalai Clash : Harsh words spoken in front of devotees

வடக்கலை தென்கலை பிரச்சினையால் நாங்கள் முழு மனதுடன் பெருமாளை தசிக்க முடியவில்லை என பக்தர்கள் புலம்புகிறார்கள்.

வடக்கலை தென்கலை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே மக்கள் பார்க்கும் நேரத்தில் அடித்துக் கொள்வது போல் சண்டையிடுவது தொடக்கதையாக உள்ளது .கடந்த வருடமும் இதே இடத்தில் இது போல பிரச்சின ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!