தந்தைக்கு தனயன் எழுப்பிய மணிமண்டபம் அல்ல.. தலைவனுக்கு தொண்டன் கட்டிய தாஜ்மஹால் : வைரமுத்து பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 10:13 am

தந்தைக்கு தனயன் எழுப்பிய மணிமண்டபம் அல்ல.. தலைவனுக்கு தொண்டன் கட்டிய தாஜ்மஹால் : வைரமுத்து பதிவு!

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன்.

கலைஞரின் கையைப் பிடித்துக்கொண்டே கலைஞர் நினைவிடம் சுற்றிவந்த உணர்வு. இது தந்தைக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல, தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால்.

“இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்”. கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார். உருவமாய் ஒலியாய் புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார். உலகத் தரம் நன்றி தளபதி என பதிவிட்டுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?