நிலைதடுமாறி சாலையோர கடைக்குள் புகுந்த மினி லாரி : உயிர் தப்பிய ஓட்டுநர்!!

Author: Udayachandran
13 October 2020, 11:46 am
Van Accident - Updatenews360
Quick Share

திருப்பூர் : நிலைதடுமாறிய சரக்கு வேன் டைல்ஸ் கடைக்குள் புகுந்ததில் மின் கம்பம் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாரதவிதமாக நிலைதடுமாறி மும்மூர்த்தி நகர் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி அதற்கடுத்து இருந்த டைல்ஸ் கடைக்குள் புகுந்தது.

இதில் கடையின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் சேதமடைந்தன. மின்கம்பம் சேதம் அடைந்ததால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்சார வாரிய ஊழியர்கள் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

Views: - 41

0

0