டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து ! ஒருவர் பலி!!

28 August 2020, 1:24 pm
Tirupur Accident - Updatenews360
Quick Share

கோவை : நீலாம்பூர் அருகே கம்பி வேலை அமைக்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை நீலம்பூர் பகுதியிலிருந்து அவிநாசியை அடுத்துள்ள பழங்கரை பகுதியில் கம்பி வேலி அமைக்க 9 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோவை – சேலம் ஆறுவழிச்சாலையில் வந்த வேன் அவிநாசி அருகே வரும் பொழுது பின்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 21) என்ற தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் ஒரு தொழிலாளி என இருவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 28

0

0