மனு தர்மத்தை எதிர்த்து அறிவாலயத்தில்தான் திருமாவளவன் போராட வேண்டும் : வானதி சீனிவாசன் அதிரடி …!!

3 November 2020, 4:51 pm
vanathi sree - updatenews360
Quick Share

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட வானதி சீனிவாசன் சென்னை பாஜக அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் பொறுப்பு இல்லை. சமூகத்தின் பொறுப்பாகும். குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டத்திலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சட்டத்திலும் மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.

நடுத்தர பெண்ணான எனக்கு தேசிய அளவிலான பொறுப்பு கொடுத்திருப்பது, எனக்கு கிடைத்த பாக்கியமாகும். வாக்காளர்களாக இருக்கும் பெண்களை அரசியல் ரீதியாக தீவிர பங்கேற்பாளர்களாக மாற்ற முயற்சிப்பேன்.

Thirumavlavan- updatenews360 (18)-Recovered

மனு தர்மத்தை எதிர்த்து போராட வேண்டுமெனில், அறிவாலயத்தில்தான் திருமாவளவன் போராட வேண்டும். பிறப்பு ரீதியாக எனக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. திமுகவில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருமாவளவன் அறிவாலயத்தில்தான் போராட வேண்டும், எனத் தெரிவித்தார்.

Views: - 15

0

0

1 thought on “மனு தர்மத்தை எதிர்த்து அறிவாலயத்தில்தான் திருமாவளவன் போராட வேண்டும் : வானதி சீனிவாசன் அதிரடி …!!

Comments are closed.