உள்ளாட்சி தேர்தலை கைப்பற்ற திமுக ‘ரெய்டு’ நாடகம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக வானதி ‘வாய்ஸ்’!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2021, 1:16 pm
Vanathi Support SPV- Updatenews360
Quick Share

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலவருக்கு சொந்தமான இடங்கள் உட்பட 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஒரு பெட்டக சாவி மற்றும் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியில் நடைபெறுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கொங்கு மண்டலத்துக்கு அதிகமான திட்டங்களை கடந்த அதிமுக ஆட்சியை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பி உள்ள திரு எஸ்.பி வேலுமணி அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக செயல்பட்டு வந்ததாகவும், தற்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தடையாக உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை மனரீதியான உறுதியை குலைப்பதற்காகவும் அவருடைய சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நடவடிக்கையை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Views: - 392

0

0