வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..!!!

26 February 2021, 8:52 pm
pmk celebration - updatenews360
Quick Share

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கடந்த ஆறு கட்டமாக கிராமநிர்வாக அலுவலர், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம். நகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற ஆறு கட்டமாக மனு கொடுத்தும், போராட்டங்களும் நடத்தினர்

இந்த போராட்டங்களுக்கு வெற்றி கிட்டும் வகையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5% இடஒதுக்கீட்டை அறிவித்தார்.

இந்த அறிவிப்பை கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி பழைய பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா தலைமையில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Views: - 1

0

0