விஏஓ கொலை… விவசாயி செய்த கொடூரச் செயல் : நீதிமன்றம் விதித்த பரபரப்பு தீர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2024, 7:46 pm

சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிராம உதவியாளராக பணி புரிந்த ராதாகிருஷ்ணன் (52). திருவேகம்பத்தூர் அருகே உள்ள ஆளங்கோட்டை கண்மாய் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் (51 )என்ற விவசாயி நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து இருப்பதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் அன்று மாலை இருசக்கர வாகனத்தில் சருகனிக்கு சென்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

இது தொடர்பாக திருவேகம்பத்து போலீசார் கணேசனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?