வயநாட்டில் மாவோயிஸ்ட் என்கவுண்டர் : தமிழக – கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை..!!

4 November 2020, 4:15 pm
maoist - vayanad - updatenews360
Quick Share

கேரள மாநிலம் வயநாடு அருகே மாவோயிஸ்ட் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், தமிழக – கேரள மாநில எல்லையில் இருமாநில போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு அருகே உள்ள மீன்முட்டி வனப்பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு, கேரள போலீசாரும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மீதமுள்ள 5 பேரும் காயங்களுடன் தப்பியோடினர்.

இந்த நிலையில், தப்பியோடி மாவோயிஸ்ட்களை மடக்கி பிடிக்கும் நோக்கில், தமிழக – கேரள எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி உள்பட 11 சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, நியூகோப், தேவாலா, நெலாக்கோட்டை, தேவர்சோலை, சேரம்பாடி, மசினகுடி என அனைத்து காவல்நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் இரு மாநில எல்லைகளில் உள்ள மருத்துவமனைகளில் குண்டு காயங்களுடன் யாரேனும் அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 28

0

0