அமைச்சர் பொன்முடிக்கு முட்டுக் கொடுக்க விசிக எம்எல்ஏ அப்படி சொல்லியிருக்கிறார் : சிவி சண்முகம் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 2:47 pm

விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் கள்ளசாராயம் மற்றும் போலி மதுபானம் ஆறாக ஓடுகிறது. சமீபத்தில் கூட விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 24 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டில் நேற்று டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திய கோயில் பூசாரி மற்றும் அவரது நண்பர், 16 வயது சிறுவன் ஆகியோர் ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காகு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூசாரி உயிரிழந்ததாக, இன்று செய்தி வெளிவந்துள்ளது.

இதையடுத்து, டாஸ்மாக் மதுபானத்தில் பெயிண்டை கலந்து அவர்கள் குடித்து இருப்பார்கள் என்று காவல்துறை சொல்லுகிறது. தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானம் அருந்தி ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறையும், தமிழக அரசும் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். மரக்காணம் போன்று ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

மேலும், விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்துக்கு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வழிபட சென்றால் அங்கு சாதி கலவரம் வெடிக்கும் என்று நான் கூறியதாக, இரண்டு நாட்களுக்கு முன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சிந்தனைச்செல்வன் எனது பேட்டியை முழுமையாகப் பார்த்தாரா, இல்லையா என்பது தெரியவில்லை. பார்த்து இருந்தால் இப்படி அவர் சொல்லி இருக்க மாட்டார். யாரோ சொன்னதை வைத்து, இப்படி அவர் சொன்னாரா என்பது தெரியவில்லை.

உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, முட்டுக் கொடுப்பதற்காக, நான் சொல்லாததை சொன்னதாக சிந்தனைச்செல்வன் கூறியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்பான கலவரத்திற்கு ஒரு குறிப்பிட்ட இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று உளவுப்பிரிவு தெரிவித்தது. இது, அப்போது செய்தியாகவும் வெளிவந்தது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அப்போது போராடியது. ஆனால், அதன் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தவறுகளை மூடி மறைப்பதற்காக, அரசு செயல்படுகிறது,

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதுபோல, கோயிலும் அனைவருக்கும் சொந்தம். எல்லோரும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற சி.வி.சண்முகம், ஜப்பான் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானிலிருந்து வந்த களைப்பில் இருக்கிறார்.

களைப்பு முடிந்து ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து பகுதியை பார்வையிட செல்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கிண்டல் அடித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!